மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி வீட்டில் அதிரடி சோதனை: ரொக்கம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல்…

Author: Udhayakumar Raman
23 September 2021, 10:12 pm
Quick Share

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவரின் வீடு, அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி, கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சேலம் மாவட்டம் ஆத்தூரை டுத்த அம்மாபாளையத்தை சேர்ந்த வெங்கடாசலம் பொறுப்பு வகித்து வருகிறார். ஏப்ரல் மாதத்தில் மட்டும் 40-க்கும் அதிகமான தொழிற்சாலைகளுக்கு வெங்கடாசலம் அனுமதி வழங்கியதாகவும், அதற்காக லட்சக் கணக்கில் லஞ்சம் பெற்றதாகவும் புகார் எழுந்தது. பல ஆண்டுகளாக முறைகேட்டில் ஈடுபட்டு வெங்கடாசலம் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து, சென்னையில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம், வேளச்சேரியில் உள்ள வெங்கடாசலத்தின் வீடு, பண்ணை தோட்டம் மற்றும் சொந்த ஊரான,

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, அம்மம்பாளையத்தில் உள்ள வீடு உள்பட ஐந்து இடங்களில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர்.வெங்கடாசலத்தின் சொந்த ஊரில் நண்பகலில் தொடங்கிய சோதனையானது இரவு 8.30 மணிக்கு முடிவுக்கு வந்தது. இச்சோதனையில், ரூ. 13.5 லட்சம் ரொக்கப்பணம், ரூ. 2 கோடி மதிப்பிலான 6 கிலோ தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்ட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Views: - 169

0

0