நீதிமன்றம் சுற்றறிக்கை… கொந்தளித்த தமிழகம் : அம்பேத்கர் படங்கள் அகற்றப்படாது.. உயர்நீதிமன்றம் அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
25 July 2023, 11:43 am

நீதிமன்றங்களில் தலைவர்களின் படங்களை வைக்கும் விவகாரத்தில் தற்போது உள்ள நடைமுறை தொடரும் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவர் உருவப்படங்கள் மட்டுமே வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில், முதலமைச்சரின் அறிவுறுத்தலையடுத்து, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலாவை, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சந்தித்துப் பேசினார். அப்போது, நீதிமன்றங்களில் அம்பேத்கரின் புகைப்படங்களை அகற்றக்கூடாது என்பதே அரசின் நிலைப்பாடு என்பதை தெரிவித்தார்.

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!