இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு கொரோனா பரிசோதனை..!

21 August 2020, 12:00 pm
Quick Share

காய்ச்சலால் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நல்லகண்ணு உடல்நிலை சீராக உள்ளது என மருத்துமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் முதுபெரும் இடதுசாரிக் கட்சி தலைவரான நல்லகண்ணுவுக்கு லேசான காய்ச்சல் இருந்துள்ளது. இதன் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று இரவு அவர் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் அவருக்கு தீவிர பரிசோதனை மேற்கொண்டு வரும் நிலையில் அவர் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தமிழகத்தில் கொரோனா தொற்று தீ போல் பரவி வருவதால் அரசியல் கட்சியினர், எம்.பி, எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட பலர் கோரனாவால் பதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக நல்லுகண்ணுவுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இந்த நிலையில் இன்று அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவு வந்த பிறகு அதற்கு ஏற்றவாறு சிகிச்சை அளிக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.