சைக்கோ கொலைகாரன் நடமாட்டம்?…இருவேறு இடங்களில் நிகழ்ந்த கொடூர கொலை: போலீசார் தீவிர விசாரணை..!!

Author: Rajesh
30 March 2022, 4:53 pm
Quick Share

புதுச்சேரியில் இருவேரு இடங்களில் நடைபெற்ற கொலை தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுச்சேரி கிருமாம்பாக்கம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட புதுச்சேரி – கடலூர் எல்லையான கன்னிக்கோயிலில் ஒருவரும், இதே காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட நரம்பையில் ஒருவரும் என இரண்டு பேர் விடியற்காலை கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து நரம்பை பகுதிக்கு சென்ற கிருமாம்பாக்கம் போலீசார் கொலை செய்யப்பட்டு இருந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டதில் அவர் தமிழக பகுதியான ஜெயங்கொண்டத்தை சேர்ந்த முருகன் என்பவர் என்பது தெரியவந்தது.

மற்றொருவர் புதுச்சேரியில் தங்கி கொத்தனாராக பணியாற்றி வந்ததாகவும், இவர் மது அருந்தி கொண்டிருந்த போது மர்ம நபர் யாரோ இவரை கட்டையால் தாக்கி கொலை செய்து விட்டு தப்பி ஒடியது தெரியவந்துள்ளது.

இதேபோல் புதுச்சேரி – கடலூர் எல்லையான கன்னியகோயில் பகுதியில் 55 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் தலையில் நசுங்கி இறந்து கிடப்பதாக கிருமாம்பாக்கம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்று போலிசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் அடையாளம் கான முடியாத ஆண் நபரை யாரோ சிமெண்ட் சிலாப்பை எடுத்து அவரின் தலையில் போட்டு கொலை செய்திருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் சந்தேகத்தின் பேரில் அதே பகுதியில் சுற்றி திறந்த மன நலம் பாதிக்கப்பட்ட மணிகண்டன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாக போலிசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஒரே காவல் நிலைய சரகத்திர்குல் நடைபெற்ற இரட்டை கொலை சம்பவம் கிருமாம்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.

Views: - 969

0

0