மேஸ்திரியின் மனைவியை கொன்ற கொத்தனாருக்கு ஆயுள் தண்டனை : கடலூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
25 September 2021, 1:45 pm
Murder Judgement -Updatenews360
Quick Share

கடலூர் : பெண்ணை கொலை செய்த கொத்தனாருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

சென்னை மணலி எஸ்டேட் புதுத்தெருவைச் சேர்ந்தவர் தே.மணி (வயது 48). கொத்தனாரான இவர் கடலூர் குண்டு உப்பலவாடியைச் சேர்ந்த கோபால் என்ற மேஸ்திரியிடம் வேலைப்பார்த்து வந்தார்.

இந்நிலையில், 16-10-2018 அன்று வீட்டில் தனியாக இருந்த கோபாலின் மனைவி சங்கீதா (வயது 36) என்பவரை கத்தியால் கழுத்தை அறுத்து அவர் அணிந்திருந்த ஆறரை சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினார்.

அக்கம்பக்கத்தினர் சங்கீதாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்த போது சங்கீதா உயிர் பிரிந்தது. இதுகுறித்து கோபால் அளித்த புகாரின் பேரில் தேவனாம்பட்டினம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மணியை சென்னையில் கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நகைக்காக பெண்ணை கொலை செய்தது உறுதி செய்யப்பட்டதால் மணிக்கு ஆயுள் தண்டனையும் ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Views: - 209

0

0