கடலூருக்கு புதிய ஆட்சியர் நியமனம் : தமிழக அரசு உத்தரவு

30 June 2020, 5:03 pm
cuddalore collector - updatenews360
Quick Share

கடலூர் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கடலூர் ஆட்சியராக பதவி வகித்து வந்தவர் அன்புச்செழியன். இவரது பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால், கடலூருக்கு புதிய ஆட்சியரை நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், தமிழக அரசின் தலைமை செயலர் சண்முகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில், கடலூர் மாவட்டத்தின் ஆட்சியர் அன்புச்செழியனின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இதனால், அம்மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக சந்திரசேகர் ஷகாமுரி நியமனம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.

Leave a Reply