பட்டுப்புழுவியல் துறையில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கை நீக்கம் : தர்ணாவில் ஈடுபட்ட வனக்கல்லூரி மாணவர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 September 2021, 3:59 pm
Sericulture Protest -Updatenews360
Quick Share

கோவை : மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில் பட்டுப்புழுவியல் துறையின் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை நீக்கபட்டதை கண்டித்து மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது.

இதில் வனவியல்,பட்டுப்புழு,மரபியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் இருந்து வரும் நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது பல்வேறு பாடப்பிரிவுகளில் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு இங்கு பட்டு புழுவியல் துறை பிரிவு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இதுவரை எட்டு பேட்ஜ் மாணவர்கள் கல்வி பயின்று சென்றுள்ளனர்.

இந்நிலையில் தற்போது நடப்பாண்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம் வெளியிட்டுள்ள மாணவர் சேர்க்கான பாட பிரிவுகளில் பட்டு புழுவியல் துறை நீக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி பட்டுப்புழுவியல் துறையில் பயின்று வரும் மாணவர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை நடைபெறும் போது இந்த துறைக்கு 30 மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறும்.

ஆனால்,நடப்பாண்டு மாணவர் சேர்க்கையை பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ளது.இதனை கண்டித்து ஏற்கனவே பட்டுப்புழுவியல் துறை படித்து வரும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு ஏன் இதனை ரத்து செய்தது என்ற காரணத்தை கூறாமல் இரண்டான்டிற்கு இந்த படிப்பை ஒத்திவைத்துள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த பட்டுப்புழுவியல் துறைக்கான அனைத்து வசதிகளும் இக்கல்லூரியில் உள்ளதால் இப்படிப்பை தொடர்ந்து அளிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும்,தங்களது போராட்டத்திற்கு அரசு செவிசாய்க்கா விட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் வனக்கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 350

0

0