சிக்கன்ல ஏன் எலும்பு இல்ல?…கடைக்காரரின் கன்னத்தில் பளார் விட்ட வாடிக்கையாளர்….!!

11 October 2020, 7:59 pm
parcel - updatenews360
Quick Share

சென்னை: பூந்தமல்லி அருகே ஓட்டலில் வாங்கிய சிக்கனில் எலும்பு இல்லாததால் வாடிக்கையாளர் ஒருவர் கடைக்காரரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரையான்சாவடியில் இருந்து ஆவடி செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது. அந்த ஓட்டலில் சில தினங்களுக்கு முன்பு, அதே பகுதியை சேர்ந்த ஒருவர் சிக்கன் வாங்கி சென்றுள்ளார்.

சிறிது நேரத்தில் ஆத்திரத்துடன் கடைக்கு வந்த அவர், ஓட்டல் ஊழியரின் கன்னத்தில் பளார்! பளார்! என அறைந்துள்ளார். இதனை கண்ட அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

காரணம் கேட்டபோது, தான் வாங்கிச் சென்ற சிக்கனில் எலும்பு இல்லை என கூறிய அந்த வாடிக்கையாளர், தொடர்ந்து கடையில் இருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இவர் அறைந்ததில் சாகுல் ஹமீது என்ற ஊழியர் நிலை குலைந்து போனார்.

அங்கு நடந்த இந்ந காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது பின்னர் அங்கிருந்தவர்கள் அந்த சிக்கன் வாடிக்கையாளரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். கன்னத்தில் அறைந்ததில் சாகுல் அமீதுக்கு காது கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து கடை உரிமையாளர் பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் பூந்தமல்லி போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு தலைமறைவாக உள்ள நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

சிக்கனில் எலும்பு இல்லாததால் ஓட்டல் ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 42

0

0