ரஜினிக்கு கட்அவுட்டா, இல்லை கெட் அவுட்டா? வசந்தகுமாரின் மகன் விஜய்வசந்த் கருத்து!!

31 October 2020, 2:43 pm
vijay Vasanth - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : இப்போது எழுந்த பிரச்சனையில் நடிகர் ரஜினியை அரசியலுக்கு அழைத்துவர சூழ்ச்சியா? அல்லது அவரை அரசியலுக்கு வரவிடாமல் செய்யும் சூழ்ச்சியா? என்பது புரியவில்லை என விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான விவசாய பாதுகாப்பு சட்டத்தை கண்டித்து இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக போராட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு பின்னர் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, “ரஜினி அரசியலுக்கு வருவது என்றால் ஏற்கனவே வந்து இருக்க வேண்டும். இப்போது எழுந்த பிரச்சனை என்பது அவரை அரசியலுக்கு அழைத்துவரும் சூழ்ச்சியா? அல்லது அவரை அரசியலுக்கு வரவிடாமல் செய்யும் சூழ்ச்சியா? என்பது புரியவில்லை.

மத்திய அரசு 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என ஒரே நாளில் அறிவித்தது போன்று எந்த அரசியல் கட்சியினரின் கருத்தையும் கேட்காமல் தன்னிச்சையாக விவசாயிகள் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்துள்ளது. யாரோ ஒரு தனி நபருக்காக கொண்டுவந்த சட்டத்தால் விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர் என்று கூறினார்.

Views: - 16

0

0