‘டீச்சர்… அவன் ஊசி போட்ட இடத்தை தொடுறான்’.. மழலை மொழியில் ஆசிரியையிடம் மாணவன் புகார்..!!

Author: Babu Lakshmanan
5 September 2023, 7:39 pm
Quick Share

திண்டுக்கல் ; ‘டீச்சர், அவன் ஊசி போட்ட இடத்தை தொடுறான் என ஒன்றாம் வகுப்பு மாணவன் மழலை குரலில் ஆசிரியையிடம் புகார் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா வடமதுரை அருகே உள்ள மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு இன்று சுகாதாரத் துறையின் சார்பாக தடுப்பூசி போடப்பட்டது.

அப்போது, தடுப்பூசி போட்ட ஒன்றாம் வகுப்பு மாணவன் திருக்குமரன் என்ற சிறுவன் ” டீச்சர்.. அவன் ஊசி போட்ட இடத்தில் தொட்டுட்டே இருக்கான், எனக்கு வலிக்குது. ஊசி போட்ட எல்லார் கையையும் அவன் தொட்டுட்டே இருக்கான்,” என்று மழலை கொஞ்சும் குரலில் புகார் செய்தான்.

மேலும் “டீச்சர் நீங்க இரவு சாப்பிட சொல்லி கொடுத்த மாத்திரையை, அவன் இப்பவே வாய்க்குள்ள போடுறான்” என்று ஆசிரியையிடம் கோள் மூட்டினான். திருக்குமரன் மழலை குரலில் பேசி ஆசிரியையிடம் புகார் செய்யும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Views: - 114

0

0