முன்னாள் மனைவி மீது வீண் பழி சுமத்திய டி.இமான்.? நம்பிய பொண்ணுக்கு இப்படியா பண்றது.!

Author: Rajesh
17 May 2022, 3:07 pm

இசையமைப்பாளர் டி.இமான் சமீபத்தில் இரண்டாம் திருமணம் செய்திருந்த நிலையில் அதன் புகைபடங்கள் இணையத்தில் வைரல் ஆனது. அவருக்கு பிரபலங்கள் கூட பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.

இதனிடையே, இமான் தனது முன்னாள் மனைவி மோனிகா குழந்தைகளை வெளிநாட்டிற்கு அனுப்ப திட்டமிட்டு பாஸ்போர்ட் தொலைந்துவிட்டது என சொல்லி புது பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்து வாங்கி இருக்கிறார் என புகார் சொல்லி இருந்தார்.

இந்த நிலையில், இமான் போட்டிருப்பது பொய்யான வழக்கு என முன்னாள் மனைவி மோனிகா விளக்கம் கொடுத்து இருக்கிறார். இமானிடம் குழந்தைகள் பாஸ்போர்ட் தருமாறு மோனிகா கேட்டபோது அவை வீடு மாறும்போது தொலைந்துவிட்டது என கூறி இருக்கிறார்.

அதற்கு பிறகு தான் மோனிகா விதிமுறைகள் படி புது பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்து இருக்கிறார். இந்த நேரத்தில் தான் இமான் மோனிகா மீதும் பாஸ்போர்ட் அதிகாரிகள் மீதும் பொய்யான வழக்கு போட்டிருக்கிறார். குழந்தைகள் பாஸ்போர்ட் வைத்திருக்க இமானுக்கு சட்டப்படி உரிமை இல்லை என அதிகாரிகள் கூறிவிட்டனர்.

மோனிகாவுக்கு இமான் எந்த வித ஜீவனாம்சமும் தரவில்லை, குழந்தைகள் பராமரிப்புக்கு மட்டும் 5000 ருபாய் தருகிறாராம். தற்போது தனது புகழை பயன்படுத்தி முன்னாள் மனைவியின் பெயரை கெடுக்க இப்படி பொய்யான வழக்கு போட்டிருக்கிறார் இமான் என்றும் மோனிகா தரப்பு தெரிவித்து இருக்கிறது

  • rajinikanth increased his salary on jailer 2 எக்குத்தப்பாய் சம்பளத்தை ஏத்திய ரஜினிகாந்த்? ஸ்தம்பித்துப்போன சன் பிக்சர்ஸ்?