தினமும் விசாரித்து 6 மாதங்களில் முடிக்க வேண்டும் : பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்து உயர்நீதிமன்றம் உத்தரவு!!
Author: Udayachandran RadhaKrishnan11 August 2021, 11:43 am
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையை 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற இந்தக் கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கியது. அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும், பொள்ளாச்சி பாலியல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தனர். அதைத் தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு, கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்ற நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையை 6 மாதத்தில் முடிக்க கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமும் இந்த வழக்கு குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மேலும், சிபிஐ விசாரணைக்கு உதவும் வகையில் சிபிசிஐடி எஸ்பி முத்தரசியை நியமித்து சென்னை உய்ரநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0
0