‘நெடுஞ்சாலை‘ பட பாணியில் கொள்ளை : ஓடும் லாரியில் துணிகளை திருடி துணிகரம்!!

9 September 2020, 12:01 pm
Theft in Lorry - updatenews360
Quick Share

கோவை : நெடுஞ்சாலை பட பாணியில் ஓடும் லாரியின் தார்ப்பாய் கிழித்து துணிகளை திருடிச் சென்ற கொள்ளையர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோட்டில் இருந்து கேரளாவுக்கு ஜவுளிகளை பார்சல் ஏற்றிக் கொண்டு லாரி வந்தது. அப்போது பெருந்துறை – விஜயமங்கலம் டோல்கேட்டில் இருந்து கருமத்தம்பட்டி டோல்கேட் வந்த பிறகு லாரியை டிரைவர் சோதனை செய்து பார்த்தபோது லாரியின் நடுவில் உள்ள தார்ப்பாய் கிழித்து உள்ளிருந்த 4 துணி பண்டல்களை கொள்ளையர்கள் எடுத்து சென்றுள்ளனர்.

திருடர்கள் லாரி ஓடிக் கொண்டிருக்கும் பொழுது சினிமா பட பாணியில் ஏதோ ஒரு வாகனத்தில் பின்புறமாக வந்து ஓடும் லாரியில் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த லாரியில் உள்ள துணிகள் அனைத்தும் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் ஏற்றி சென்றுகொண்டிருந்தது.

திடீரென்று லாரியின் ஓட்டுநர் கருமத்தம்பட்டி டோல்கேட் அருகே வந்தபோது லாரியின் கயிறுகள் அவிழ்ந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவர் மேலே ஏறி சோதனை செய்து பார்த்தபோது தார்ப்பாய் கள் அனைத்தும் முழுவதுமாக கிழிக்கப்பட்டு பொருள்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற பொழுது அவர்கள் இது எங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் திருடு போய் இருக்காது எனக் கூறி எஃப்ஐஆர் எடுக்க மறுத்து விட்டதாக கூறி, அவினாசியில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்குமாறு காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0