திருப்பூர் அருகே மாமியாரை அடித்தே கொன்ற மருமகள் : குடும்பத் தகராறின் போது வெறிச்செயல்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 August 2021, 12:36 pm
Daughter in law kills mother in law - Updatenews360
Quick Share

திருப்பூர் : தனது தங்கையை காதலித்த கணவரின் தம்பியிடம் தகராறில் ஈடுபட்ட போது மாமியாரை அடித்து கொலை செய்த மருமகளை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் திலகர் நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 65). இவரது முதல் மனைவி மயங்காத்தாள். குழந்தை இல்லாத நிலையில், பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தனர். இதையடுத்து ராமசாமி சகுந்தலா என்பவரை 2-வது திருமணம் செய்தார்.

இவர்களுக்கு கார்த்தி, சரவணக்குமார் என இரண்டு மகன்கள். இந்த நிலையில் சகுந்தலா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால், ராமசாமி தனது முதல் மனைவி மயங்காத்தாளை அழைத்து வந்து குடும்பம் நடத்தினார்.

இதில் மூத்த மகன் கார்த்திக்கு, அதே பகுதியை சேர்ந்த பிருந்தா என்பவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளனர். கார்த்தியின் தம்பி சரவணக்குமார், பிருந்தாவின் தங்கை லாவண்யாவை காதலித்தாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இருவருக்குமிடையே திடீரென கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதில் சரவணக்குமார் அவரது தங்கையை பேச வற்புறுத்தி வந்துள்ளதாக தெரிகிறது. இது பிருந்தாவின் பெற்றோர் மற்றும் தம்பிக்கு தெரியவந்தது.

இது தொடர்பாக பேச ராமசாமி வீட்டிற்கு சென்றுள்ளனர். பேச்சுவார்த்தையின் போது, மயங்காத்தாள், கார்த்தி, சரவணக்குமார் மற்றும் பிருந்தா, அவரது தம்பி சுஷாந்த், தந்தை அன்பழகன், உறவினர் ஸ்ரீராம் ஆகியோரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த தகராறில் மருமகள் பிருந்தா கீழே தள்ளியதால் மயங்காத்தாள் மரக்கட்டிலில் மோதி பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மயங்காத்தாள் உயிரிழந்தார்.

இது தொடர்பாக மயங்காத்தாளின் கணவர் ராமசாமி அளித்த புகாரின் பேரில், மருமகள் பிருந்தா (வயது 26), தம்பி சுஷாந்த், உறவினர் ஸ்ரீராம், பிருந்தாவின் தந்தை அன்பழகன் ஆகியோர் மீது 15 வேலம்பாளையம் போலீஸார் இதில் 6 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Views: - 550

0

0