ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்தவர் உயிரிழப்பு;நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

Author: kavin kumar
12 December 2021, 3:24 pm
Quick Share

தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சில்லாநத்தம் பகுதியில் ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்தவர் உயிரிழந்த சம்பவம் குறித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓட்டப்பிடாரம் தாலுகா வேப்பலோடை, கழுகாசலபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் முருகன்(24) என்பவர், சுமார் 10 வருடங்களுக்கு முன்னதாக வீட்டில் இருந்து வெளியேறி வெளி இடங்களில் சுற்றித்திரிந்து உள்ளார். மேலும் முருகனுக்கு காக்கா வலிப்பு நோய் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலையில் முருகன் புதியம்புத்தூரில் இருந்து தூத்துக்குடி செல்வதற்காக தனியார் பேருந்து ஒன்றில் சென்று கொண்டிருந்தார். மேலும் முருகன் பேருந்தின் முன்பக்க படியில் நின்று பயணம் செய்துள்ளார்.

இந்நிலையில் புதியம்புத்தூர் அருகிலுள்ள சில்லாநத்தம்- ரயில்வே பாலம் இடைப்பட்ட பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, முருகனுக்கு திடீரென வலிப்பு வந்து கீழே விழுந்துள்ளார் இதையடுத்து உடனடியாக பேருந்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக முருகனை மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் முருகன் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து முருகனின் தம்பி வீர செல்வம்(22), புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 270

0

0