தனியார் உணவகத்தில் பாஸ்தா சாப்பிட்ட இளம்பெண் மரணம் : எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த கணவர் மீது உறவினர்கள் புகார்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 July 2022, 3:52 pm
Pasta Woman Dead - Updatenews360
Quick Share

விழுப்புரம் : அன்னியூரில் அருகே இதயபிரச்சனை உள்ள காதல் திருமண செய்த இளம் பெண் தனியார் உணவக பாஸ்தா சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் அன்னியூரை சார்ந்த பிரதிபா, விஜயகுமார் என்ற காதல் தம்பதியினர் கடந்த மாதம் 13 ஆம் தேதி பெற்றோர்களின் எதிர்ப்பினை மீறி காதல் திருமணம் செய்து கொண்டு அன்னியூரில் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் நண்பர்களுடன் சுற்றுலா சென்று மாலை வீட்டிற்கு வந்தபோது திருவாமாத்தூர் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டீ பார் என்ற உணவகத்தில் வொயிட் பாஸ்தா என்ற உணவினை வாங்கி சாப்பிட்டு வந்து வீட்டில் படுத்துள்ளனர்.

இரவு பிரதிபா உணவு செரிக்காமல் வாந்தி எடுக்கவே அருகிலுள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கணவரான விஜயகுமார் சேர்த்த போது இளம் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெண்ணின் பெற்றோரான பழனி என்பவர் கஞ்சனூர் காவல் நிலையத்தில் தனது மகளுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து இறந்து விட்டதாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் கஞ்சனூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

இறந்த பெண் இதய அடைப்பு காரணமாக மாத்திரை எடுத்து கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. உடற்கூறு ஆய்வில் தான் இளம்பெண் பாஸ்தா உணவு செரிக்காமல் இறந்தாரா அல்லது உணவில் விஷம் கலந்து இறந்தாரா என்பது தெரியவரும் போலீசார் தொடர்ந்து இளம்பெண்ணின் கணவரிடம் விசாரனை செய்து வருகின்றனர்.

Views: - 153

0

0