பெரியார் வேடமிட்டதால் குழந்தைக்கு கொலை மிரட்டல்: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் காவல் ஆணையரிடம் புகார்..!!

Author: Rajesh
25 February 2022, 5:18 pm

கோவை: பெரியார் வேடமிட்ட குழந்தையை கொன்று ரோட்டில் தொங்கவிட வேண்டும் என்று பேஸ்புக்கில் பதிவு செய்த நபரை கைது செய்ய வலியுறுத்தி கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளனர்.

தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் பெரியார் போல் வேடமணிந்த குழந்தை ஒன்று பங்கேற்றது. இதனை பார்த்தை வெங்கடேஷ் குமார் பாபு என்ற நபர் அந்த குழந்தையை அடித்து கொன்று ரோட்டில் தொங்க விட வேண்டும் என்றும், அப்போது தான் மற்ற குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் பயம் வரும் என்றும் கூறி பேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கோவை மாநகர செயலாளர் சாஜித் தலைமையில் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,

தனியார் தொலைக்காட்சியில் குழந்தைகள் நிகழ்ச்சியில் பெண் விடுதலை, இளைய சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. அப்படி பெரியார் வேடமணிந்து பேசிய குழந்தைகயை தமிழக முதலைமைச்சர் அழைத்து பரிசு வழங்கி ஊக்கப்படுத்தினார்.

இந்த நிலையில், வெங்கடேஷ் என்பவர் குழந்தையை அடித்து கொன்று நடு ரோட்டில் தொங்கவிடவேண்டும், என்று பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். தனக்கு பிடிக்காத வேடமாக இருந்தாலும் மழலை என்று பாராமல் காட்டுத்தனமாக பேசிய அடிப்படை மதவாதியை கண்டித்து இன்று கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகாரளித்துள்ளோம். மேல் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார் என்றனர்.

  • trisha dance in public because of booze said by sabitha joseph மது போதையில் திரிஷா? நடுரோட்டில் செய்த தகாத காரியம்! இவங்களா இப்படி?