‘அறுத்துப்புடுவ… தலையை வெட்டிருவேன்’ : ஆக்கிரமிப்பை அகற்றிய விஏஓவுக்கு கொலை மிரட்டல்.. வைரலாகும் ஷாக் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
16 November 2022, 4:41 pm

சாணார்பட்டி அருகே ஆக்கிரமிப்பை அகற்றிய வி.ஏ.ஒவுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரின் வீடியோ வைரலாகி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதிக்குட்பட்ட சாணார்பட்டி அருகே உள்ளது மார்க்கம்பட்டி கிராமம். இங்கு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளம் ஒன்று உள்ளது. அந்த குளத்தில் வாய்க்கால் செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமித்து இருப்பதாக வி.ஏ.ஒ க்கு புகார்கள் வந்தது.

இதையடுத்து ஊராட்சி நிர்வாகத்தின் உதவியோடு ஜே.சி.பி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இதையடுத்து வி.ஏ.ஒ அலுவலகத்திற்கு வந்த மார்க்கம்பட்டியை சேர்ந்த திருப்பதி, செல்வம், மூர்த்தி ஆகிய மூன்றுபேரும் எப்படி ஆக்கிரமிப்பை எடுத்தீர்கள், இதனால் உங்கள் தலையை வெட்டிவிடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்த மிரட்டல் வீடியோ சமூக வலைதளங்களில் பதிவாகி வைரலாகியுள்ளது. இதையடுத்து தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக வி.ஏ.ஒ கோபாலகிருஷ்ணன் சாணார்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!