கோவையில் பழமை வாய்ந்த கோவில் பொக்லைன் வைத்து இடிப்பு… திரண்டு வந்த இந்து முன்னணியினர்…!!!

Author: Udayachandran RadhaKrishnan
15 March 2023, 8:10 pm

கோவையில் பழமை வாய்ந்த சிவசக்தி சாய் கோவிலை மாநகராட்சியினர் இடித்து அப்புறப்படுத்தியதற்கு இந்து முன்னணியினர் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த சிவசக்தி சாய் எனும் கோவில் இருந்துள்ளது. இந்நிலையில் இந்த கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே அந்த கோவிலை மாநகராட்சி அதிகாரிகள் கோவிலை பொக்லைன் வைத்து இடித்து அப்புறப்படுத்தினர். மேலும் கோவிலின் அருகில் இருந்த சந்தன மரத்தையும் வெட்டி எடுத்து சென்றனர்.

இதனையடுத்து அங்கு வந்த இந்து முன்னணியினர் கோவில் இடிப்புக்கு கண்டங்களை தெரிவித்தனர்.தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் கோவையில் பல்வேறு இடங்களில் கோவில்கள் இடிக்கப்பட்டு வருகிறது.

தற்போது ஆக்கிரமிப்பு என்ற பெயரில். ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த கோவில் இடிக்கப்பட்டுள்ளது. அதே போல 25 ஆண்டுகால சந்தன மரத்தை வனத்துறையின் அனுமதி இல்லாமல் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர்கள் தொடர்ந்து இது மாதிரியான செயல்களில் மாநகராட்சி ஈடுபட்டால் இந்து முன்னணி சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

பேட்டியின் போது இந்து முன்னணி கோட்டச் செயலாளர் பாபா, கிருஷ்ணன், மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால் ல்பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் ல்,மாவட்ட செயலாளர் ஆறுச்சாமி, மகேஸ்வரன், கோயில் தர்மகர்த்தர் கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!