இதுக்கு மேலயும் பொறுத்துக்கொள்ள முடியாது : உயர்நீதிமன்ற உத்தரவுப்படி விதிமீறிய கட்டிடங்கள் இடிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan26 October 2021, 1:41 pm
நீலகிரி : குன்னூர் வெலிங்டன் கன்டோன்மென்ட் பகுதிகளில் விதிமீறி கட்டப்பட்ட குடியிருப்பு கட்டிடங்களைஉயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் கன்டோன்மென்ட் அதிகாரிகள் இடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால் கட்டிடங்கள் கட்டுவதற்கு பல்வேறு விதிமுறைகள் உள்ளன. ஆனாலும் குன்னூர் வெலிங்டன் கன்டோன்மென்ட் பகுதிகளில் பல்வேறு கட்டடங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டு உள்ளன.
மேலும் சிலர் வீடுகளுக்கு அனுமதி வாங்கி கொண்டு பெரிய கட்டிடங்களாக கட்டி உள்ளன. கன்டோன்மென்ட் அதிகாரிகள் ஆய்வில் போகித்தெரு, லீங்கா காம்பவுண்ட், ஆஸ்பத்திரி சேரி, பாய்ஸ் கம்பெனி போன்ற பகுதிகளில் விதிகள் மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இது வரை குடியிருப்பு வாசிகள் எந்த விதமான பதில் கூறாத நிலையில் கன்டோன்மென்ட் அதிகாரிகள் இன்று காலை ஏராளமான காவல்துறை உதவியுடன் கட்டிடங்களை இடிக்கும் பணியில் இயந்திரங்கள் கொண்டு இடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
0
0