கூலி உயர்வை உடனே அமல்படுத்த வேண்டும்: கோவையில் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!!

Author: Rajesh
24 January 2022, 12:10 pm

கோவை: மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோவையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் அரசு அறிவித்த கூலி உயர்வை அமல்படுத்த கோரியும், இரண்டு லட்சம் விசைத்தறியாளர்களின் குடும்ப வாழ்வாதாரத்தை காக்க கோரியும், 8 ஆண்டுகளாக கூலி உயர்வு வழங்க மறுக்கும் ஜவுளி உற்பத்தியாளர்கள் கண்டித்தும் கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று காரணம்பேட்டை பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?