கிறிஸ்துவ தேவாலயத்தில் இருந்த செபஸ்தியர் சிலை அவமதிப்பு : பைக்கில் வந்த மர்ம நபர்களை தேடும் போலீசார்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 January 2022, 12:00 pm
Sebastein Statue Insult -Updatenews360
Quick Share

கோவை : கோவையில் கிறிஸ்தவ தேவாலயத்தில் உள்ள செபஸ்தியர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை ராமநாதபுரம் சிக்னல் அருகே டிர்னிட்டி கிறிஸ்தவ தேவாலயம் செயல்பட்டு வருகிறது. இந்த தேவாலயத்தின் நுழைவு வாயில் அருகே, செபஸ்தியர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் தேவாலயத்தின் நுழைவாயில் இருந்த சிலையை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து தேவாலயத்தின் பாதிரியார் அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செபஸ்தியர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Views: - 1912

0

0