‘ராசி கிளினிக் இது ராசியான கிளினிக்’… ஜவுளிக்கடையை மிஞ்சிய மருத்துவமனையின் ஆடி ஆஃபர் விளம்பரம்.. வைரலாகும் போஸ்டர்…!!

Author: Babu Lakshmanan
29 July 2023, 3:50 pm

திண்டுக்கல் நகர் பகுதியில் ஜவுளி கடை ஆடி விளம்பரத்தை மிஞ்சு வகையில் மருத்துவமனையின் விளம்பரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்லில் ஏராளமான மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் வாடிக்கையாளர்கள் பிடிப்பதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆப்பர் வழங்கி ஆடி தள்ளுபடி எனக்கூறி வாடிக்கையாளர்களை மருத்துவமனை நிர்வாகங்கள் இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

ஜவுளி கடைக்கு மட்டுமல்ல அனைத்துக்கும் விளம்பரம் உண்டு என்பதை திண்டுக்கல் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் காட்டி உள்ளது. திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் பல் மருத்துவமனையின் வித்தியாசமான விளம்பரம் ஆடி மாதத்தை முன்னிட்டு பிரசுரிக்கப்பட்டுள்ளது.

ஆடி ஆஃபர் ஜவுளிக்கடை நகைக்கடை மட்டுமே ஆடி ஆஃபர் வழங்கி வந்த நிலையில், தற்போது மருத்துவர்களும் ஆடி ஆஃபரை அறிவித்துள்ளனர். இதன்படி, ஒரு பல் பிடிங்கினால் 149 ரூபாய் பாதிக்கப்பட்ட பல்லை அடைத்தால் 149 ரூபாய் வித்தியாசமான விளம்பர போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

ஆடி மாதம் என்றாலே ஆஃபர் வரும் ஆனால் மருத்துவமனைக்கு மாத்திரை வந்ததை கண்டு பொதுமக்கள் பிரமித்துள்ளனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?