கோவில் நகையை அமைச்சர் திருடுவது போல் சித்தரிப்பு : இந்து முன்னணியினர் நடத்திய நூதன ஆர்ப்பாட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 October 2021, 12:43 pm
Hindu Munnani Protest - Updatenews360
Quick Share

கோவை : அறநிலையதுறை அமைச்சர் சேகர்பாபு கோவில் நகைகளை திருடுவதுபோன்று சித்தரித்து கோவையில் இந்துமுண்ணனியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை கோனியம்மன் ஆலயம் முன்பு இந்து முண்ணனி மாநில தலைவர் கடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் இன்று ஆர்ப்ப்பட்டம் நடைபெற்றது. கோவில் நகைகளை தங்ககட்டிகளாக மாற்றும் தி.மு.க அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்காக கோவிலின் முன்பு வாகனத்தில் அலங்கரித்து வைத்திருந்த அம்மன் சிலையிலிருந்து தி.மு.க அமைச்சர் சேகர்பாபு தங்க நகையை திருடுவது போன்று சித்தருத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அமைச்சரை திருடனாக சித்தரித்த இந்துமுண்ணனியினரின் செயலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் பலரும் வேடிக்கை பார்த்து சென்றனர். இந்த நூதன ஆர்ப்பாட்டத்தால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Views: - 169

0

0