சிறைவாசத்தில் இருந்த போது முளைத்த திருமண ஆசை : லிவ்விங் டூகெதர் தான் பண்ணுவேன்.. டிடிஎஃப் வாசன் மீண்டும் சர்ச்சை!!!

Author: Udayachandran RadhaKrishnan
15 November 2023, 4:15 pm

சிறைவாசத்தில் இருந்து போது முளைத்த திருமண ஆசை : லிவ்விங் டூகெதர் தான் பண்ணுவேன்.. டிடிஎஃப் வாசன் மீண்டும் சர்ச்சை!!!

கோவையை சேர்ந்த பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன். இவர் அதிக சிசி உள்ள வாகனங்களை இயக்கி அதை வீடியோவாக பதிவிட்டு தனது யூடியூப் சேனலில் பதிவிடுவார்.

இவருக்கு ஏராளமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். அது போல் இவர் வெளியே வந்தால் இவரை காண சினிமா நடிகர்களுக்கு கூட்டம் கூடுவதை போல் ரசிகர்கள் கூடிவிடுகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம், காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் டிடிஎஃப் வாசன் சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென வீலிங் செய்த போது அவர் நிலைத்தடுமாறி அருகே இருந்த பள்ளத்தில் தூக்கிவீசப்பட்டு விழுந்தார். இதை தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரை பாலுசெட்டிசத்திரம் போலீஸார் கைது செய்தனர்.

சிகிச்சை முடிந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நிபந்தனை ஜாமீனில் அவர் 40 நாட்கள் கழித்து வெளியே வந்தார். தனக்கு 10 ஆண்டுகளுக்கு இரு சக்கர வாகனம் ஓட்டுவதற்கான லைசன்ஸ் ரத்தானது நியாயமே இல்லை என தெரிவித்திருந்தார்.

அது போல் அவருடைய தாயாரும், இதுபோல் பெற்றவர்களை பிள்ளைகள் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் என அலைய வைக்காதீர்கள் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பல நாட்களுக்கு பிறகு சோசியல் மீடியா பக்கம் வந்த டிடிஎஃப் வாசன் கூறிய கருத்து பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

வாசன் கூறுகையில் எனக்கு 40 நாட்கள் சிறை வாசம் பல அனுபவத்தை தந்தது. ஆனால் சிறை வாழ்க்கையில் இருந்த எனக்கு கல்யாண ஆசை வந்துவிட்டது.

கனவு கார் வாங்கிவிட்டு வாழ்க்கையில் நன்றாக செட்டில் ஆகிவிட்டு பிறகுதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என இருந்தேன். ஆனால் எனக்குள் பல கனவுகள் இருந்தாலும் அதை எல்லாம் தாண்டி திருமண ஆசை வந்துவிட்டது.

இப்போது திருமணம் செய்து கொள்ளலாம் என இருக்கிறேன். அதிலும் ஓடி போய் திருமணம் செய்து கொள்ளலாம் என இருக்கிறேன். 3 மாதம் லிவிங் டுகெதரில் இருந்துவிட்டு கல்யாணம் செய்ய வேண்டும்.ஏனென்றால் வாழ்க்கையில் நிறைய பார்த்துவிட்டேன் என்றார்.

ஏற்கனவே இவர் செய்த செயல்களுக்கு நீதிபதி கடும் கோபத்துடன் இவரது யூடியூப் சேனலை முடக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். தற்போது ஜாமீனில் வந்தும் அடக்கி வாசிக்காமல் லிவிங் டுகெதர் குறித்து பேசியுள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!