2 வருடங்கள் காத்திருந்த பக்தர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியது: திருவண்ணாமலையில் கிரிவலத்திற்கு அனுமதி…ஆனால் கட்டுப்பாடுகள் இருக்கு..!!

Author: Rajesh
15 March 2022, 12:34 pm
Quick Share

தி.மலை: திருவண்ணாமலையில் கடந்த 2 வருடங்களாக கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக திருவண்ணாமலை மலைச்சுற்றும் பாதையில் கிரிவலம் செல்ல கடந்த இரண்டு ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கிரிவலத்திற்கு ஆட்சியர் முருகேஷ் அனுமதி அளித்துள்ளார்.

இதனால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிவபெருமானின் அக்னித் தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில். இந்தகோயிலுக்கு அருகே உள்ள மலையைச் சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கிரிவலம் வருவது வழக்கம்.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல கடந்த 2 ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டது. நோய் தொற்று குறைவு காரணமாக வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கள் விலக்கிக்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், கொரோனா தொற்று நடவடிக்கைக்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் திருவண்ணாமலை கிரிவலத்திற்கு ஆட்சியர் முருகேஷ் அனுமதி அளித்துள்ளார். அதன்படி, கிரிவலம் வரும் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றியும், முக கவசம் அணிந்தும் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Views: - 689

0

0