அதிகளவு தண்ணீர்..நாளை வைகை ஆற்றில் பக்தர்கள் இறங்க தடை : கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு ரத்து? ஆட்சியர் விளக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 April 2022, 1:02 pm
Vaigai Kallazhagar - Updatenews360
Quick Share

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கமான உற்சாகத்தோடு இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. நேற்று திருக்கல்யாண நிகழ்வும் இன்று தேரோட்ட நிகழ்வும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது,

மதுரையில் மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் சித்திரை திருவிழா ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,கடந்த ஏப்.12 இல் கள்ளழகர்,அழகர் கோவிலில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார்.

இந்நிலையில்,மதுரை வைகை ஆற்றில் நாளை கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி,அதிக அளவு தண்ணீர் வருவதால் நாளை வைகை ஆற்றில் பக்தர்கள் இறங்க தடை விதித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.

எனினும், வைகை ஆற்றின் கரையோரங்களில் மட்டும் நின்று சாமி தரிசனம் செய்ய மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

Views: - 650

1

0