தை கடைசி வெள்ளி : இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள் : பாதயாத்திரை சென்று சாமி தரிசனம்…

Author: kavin kumar
11 February 2022, 3:48 pm
Quick Share

விருதுநகர் : தை மாத கடைசி வெள்ளி திருவிழாவையொட்டி இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் பாதயாத்திரை சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்திபெற்றது. இந்த கோவிலில் ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதிலும் சித்திரை, ஆடி, தை, பங்குனி உள்ளிட்ட மாதங்கள் மிகவும் சிறப்பான மாதங்களாகவும் இந்த மாதங்களில் கோவிலில் சிறப்பு விழாக்கள் மற்றும் பண்டிகைகள் நடைபெறுவதால் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்திருந்து சாபி தரிசனம் செய்வர். மேலும் சிறப்பு விழா காலங்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும் தென் மாவட்டங்களிலிருந்து அதிக அளவிலான பக்தர்கள் பாதயாத்திரையாக கூட்டம் கூட்டமாக நடந்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி செல்வர்.இந்தநிலையில் தை மாதத்தில் தென் மாவட்டங்களான தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும் பாதயாத்திரையாக அதிக அளவிலான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம் இந்நிலையில் தை மாதம் கடைசி வெள்ளியான இன்று பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.

சங்கரன்கோவில் திருவேங்கடம் தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி போன்ற பல ஊர்களில் இருந்து அதிக அளவிலான பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து சென்றனர். இதில் பெண்கள் அதிக அளவில் பல குழுக்களாக பாதயாத்திரை சென்றனர். நேற்று சங்கரன்கோவில், திருவேட்டநல்லூர் பகுதிகளை சேர்ந்த கோவிந்தன், மாரியப்பன், குருநாதர் தலைமையில் சுமார் 600 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக அம்மன் பாடல்களை பாடியவாறு இருக்கன்குடி மாரிம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றனர்.

Views: - 893

0

0