பார்வதி மீண்டு வர பக்தர்கள் பிரார்த்தனை : மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மருத்துவர்கள் சிகிச்சை!!
Author: Udayachandran RadhaKrishnan1 October 2021, 1:17 pm
மதுரை : மீனாட்சியம்மன் கோவில் யானைக்கு மற்றொரு கண்ணிலும் கண்புறை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மருத்துவ குழு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள பார்வதி யானைக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இடது கண்ணில் கண்புறை நோய் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து வெளிநாட்டு மருத்துவ நிபுணர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
படிப்படியாக குணமடைந்து வந்த நிலையில் வலது கண்ணிலும கண்புறை நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் குழு மருத்துவ பரிசோதனை நடத்தினர்.
யானையின் வலது கண்ணை பரிசோதனை செய்துள்ள மருத்துவ குழு யானையின் ரத்த மாதிரி, கண்ணின் சில மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்து சென்றுள்ள நிலையில் பரிசோதனை நடத்த உள்ளனர். மேலும் இடது கண்ணில் ஏற்பட்ட கண்புறை பாதிப்பு குறைந்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
0
0