புத்தாண்டை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்… படிப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
1 January 2024, 11:59 am

புத்தாண்டை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்… படிப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்!!!

அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீட்டான பலனை தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஆங்கில வருட பிறப்பை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பின்னர் பக்தர்களுக்கு அனுமதிக்கபட்டனர்.

ஆங்கில வருட பிறப்பு மற்றும் பள்ளி விடுமுறை, மற்றும் மார்கழி மாதம் ஐயப்ப பக்தர்கள் வருகை என ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்ததால் மின் இழுவை ரயில் ,ரோப்கார் நிலையம் மலைக்கோவில் மூன்று மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக மலைக் கோவிலுக்கு பக்தர்கள் செல்லவும் ,, படிப்பாதை வழியாக கீழே இறங்கவும் ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

பக்தர்கள் பாதுகாப்பு வசதிக்காக காவல்துறையினர் ,போக்குவரத்து காவல்துறையினர் , மற்றும் ஊர் காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?