திருமணம் ஆகாத விரக்தியில் குடிபோதையில் தாயிடம் தகராறு செய்த மகனை அடித்து கொலை

10 November 2020, 11:28 pm
Quick Share

திருப்பூர்: தாராபுரம் அருகே திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தினமும் குடிபோதையில் தாயிடம் தகராறு செய்ததால் மகனை அடித்து தாய் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்து உள்ள ஊத்துபாளையத்தை சேர்ந்தவர் நல்லசாமி இவரது மனைவி தமிழரசி இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நல்லசாமி சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். மேலும் தமிழரசி மற்றும் இரண்டு மகன்கள் மருமகள் பேரன் பேத்தியுடன் என அனைவரும் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று மூத்த மகனும் மருமகளும் விசேஷத்திற்காக வெளியூர் சென்றிருந்த நிலையில் அம்மா தமிழரசியும் திருமணமாகாத சிதம்பரமும் தனியாக இருந்தனர். தினமும் சிதம்பரசாமி மது அருந்திவிட்டு குடிபோதையில் தாய் தமிழரசிடம் தினமும் திருமணம் செய்து வைக்கக்கோரி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இன்று மீண்டும் சிதம்பரம் குடிபோதையில் தனது தாயிடம் குடிபோதையில் தகராறு செய்த போது தமிழரசி வேதனை தாங்க முடியாமல் அருகில் இருந்த உலக்கையை எடுத்து தலையில் அடித்து கொன்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அலங்கியம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தாய் தமிழரசியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த கொலைச் சம்பவம் குறித்து தகவலறிந்த தாராபுரம் ஆய்வாளர் மகேந்திரன் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 21

0

0