வட்டாட்சியர் அலுவலக ஊழியருக்கு கொரோனா: வட்டாட்சியர் அலுவலகம் தற்காலிகமாக மூடல்

2 September 2020, 4:11 pm
Quick Share

தருமபுரி: அரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் 5 நாட்களுக்கு வட்டாட்சியர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவி வரும் நிலையில் தருமபுரி மாவட்டத்தில் வைரஸ் தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைவாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 48 பேர் பாதிக்கபட்டு அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தருமபுரி மாவட்டம் அரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிப்புரியும் இளநிலை உதவியார் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியபட்டதால் வட்டாட்சியர் அலுவலகம் 5 நாட்களுக்கு மூடப்பட்டது. தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகம் முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கபட்டுள்ளது.

மேலும் அரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள், தங்களது வீடுகளிலே தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து ஏழு நாட்களுக்கு பிறகு வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது மேலும் வைரஸ் தொற்று பாதித்த இளநிலை உதவியாளரின் தொடர்புகளை கணக்கெடுக்கும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று வரை தருமபுரி மாவட்டத்தில் வைரஸ் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 1254 ஆக இருந்த நிலையில் இன்று மேலும் புதிதாக 48 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்து 302 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1110 குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 131 பேர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 13 பேர் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

Views: - 0

0

0