கரைபுரண்டோடும் காவிரி : 1 இலட்சம் கனஅடி நீர் திறக்க வாய்ப்பு.!!

8 August 2020, 9:14 pm
Dharmaprui Hogenakkal - Updatenews360
Quick Share

தருமபுரி : தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி நீர் வந்துக்கொண்டிருப்பதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டோடு வருகிறது.

கர்நாடக மற்றும் கேரளா மாநிலத்தில் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபிணி மற்றும் கே. ஆர்.எஸ். இரு அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், கபிணி மற்றும் கே. ஆர். எஸ்., அணைகள் வேகமாக நிரம்பி வருவதால், அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரக்கூடிய நீர் அப்படியே தமிழகத்திற்கு வரும் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டு வருகிறது.

கடந்த இரு தினங்களாக காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை கர்நாடக அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட 50 ஆயிரம் கன அடி தண்ணீர் இன்று மாலை தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி நீர் முழுமையாக வந்துக்கொண்டிருக்கிறது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவிகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம், குடகு, மற்றும் கேரளா மாநிலம் வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் கபணி, கே. ஆர். எஸ். மற்றும் நுகு ஆகிய அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால் அணைகளின் பாதுகாப்பு கருதி மூன்று அணைகளுக்கு வரக்கூடிய தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 இலட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

மேலும் இன்று மதியம் கபணியிலிருந்து 70 ஆயிரம் கன அடி நீரும், கே. ஆர். எஸ்., அணையிலிருந்து 45 ஆயிரம், நுகு அணையிலிருந்து 8 ஆயிரம் கன அடி நீர் என மொத்தம் மூன்று அணைகளிலிருந்து வினாடிக்கு 1 இலட்சத்து 23 ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிட்டபபட்டுள்ளது. இந்த தண்ணீரானது நாளை காலைக்குள் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துக்கொண்டே வருவதால், மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது.

Views: - 9

0

0