சென்னை அணி வெற்றி பெற ரங்கோலி கோலத்தில் தோனியின் உருவம் : 12 அடி உயரத்தில் வரைந்து பட்டதாரி பெண் அசத்தல்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 October 2021, 2:26 pm
Dhoni FAn -Updatenews360
Quick Share

ஐபிஎல் போட்டியில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி வெற்றி பெற ரங்கோலி கோலத்தில் தோனியின் உருவபொம்மையை வரைந்து பட்டதாரி பெண் அசத்தியுள்ளார்.

ஐ.பி.எல்.போட்டியின் இறுதி போட்டியில் சென்னை அணி கோப்பை வெல்வதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் புதுச்சேரியை சேர்ந்த ஓவிய பட்டதாரி பெண் ஒருவர் டோனியின் உருவத்தை ரங்கோலியாக வரைந்துள்ளார்.

புதுச்சேரி முருங்கப்பாக்கத்தை சேர்ந்த ஓவிய பட்டதாரி பெண் அறிவழகி. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான தோனியின் தீவிர ரசிகரான இவர் தற்போது ஐ.பி.எல் இறுதி போட்டியில் சென்னை அணி வெற்றி பெற வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தோனியின் உருவத்தை ரங்கோலியாக வரைந்துள்ளார்.

12 அடி உயரம் 12 அடி அகலத்தில் 7 கிலோ கோலப்பொடியை வைத்து 2 நாட்களில் இந்த ரங்கோலியை வரைந்துள்ளார். அறிவழகியின் இந்த ரங்கோலியை பலரும் கண்டு பாராட்டி வருகின்றனர்.

இவர் இதற்கு முன்பு தேச தலவர்களின் பிறந்தநாள்களில் அவர்களது உருவத்தை ரங்கோலியாக வரைந்து மரியாதை செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 338

1

0