காதலர் விக்னேஷ் சிவனுக்காக ராஜதந்திரம் செய்த நயன்தாரா.? அப்படி என்ன பண்ணாங்கன்னு தெரியுமா.?

Author: Rajesh
15 May 2022, 6:39 pm
Quick Share

சமீபகாலமாகவே திரையுலகில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காத படங்களுக்குக் சக்சஸ் பார்ட்டி வைத்து கொண்டாடி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் திரையரங்குகளில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் காத்து வாக்குல ரெண்டு காதல்ஃ இந்த பெரிய அளவில் வரவேற்பு இல்லை என தெரிந்துதான் நடிகை நயன்தாரா இந்த படத்துக்கு, பெரிய பிரமோஷன் எதுவும் செய்து காசை வீணடிக்க வேண்டாம் என்று இருந்துவிட்டாராம்.
இந்நிலையில் தான் நடிகை நயன்தாரா படம் வெளியான ஒரு வாரத்திலேயே சக்சஸ் பார்ட்டி வைத்து கொண்டாடி இருக்கிறாராம். ஆனால் படம் வெளியான சில தினங்களிலேயே தியேட்டர்களில் காற்று வாங்கியது. அப்படியிருக்கும்போது நடிகை பார்ட்டி வைத்துக் கொண்டாடியது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

ஆனால் இதற்குப் பின்னணியில் பலமான ஒரு காரணம் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன் அடுத்ததாக காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் இயக்க இருக்கிறார். ஒரு வேலை இந்த படம் தோல்வி என்று தெரிந்தால் அஜித் பின் வாங்கி விடுவார் என்ற பயத்தில்தான் நயன்தாரா இப்படி செய்து வருகிறாராம்.

ஆனால் நடிகர் ஒருவருக்கு வாக்கு கொடுத்து விட்டால் எக்காரணம் கொண்டும் அந்த முடிவை மாற்றிக் கொள்ள மாட்டாராம் நயன்தாரா. அதிலும் விக்னேஷ் சிவன் காதலர், நிச்சயமாக இந்த படத்தை இயக்கி வெற்றி பெற்று விடுவார் என்ற ஒரு நம்பிக்கையும் நடிகைக்கு இருக்கிறதாம். அப்புறம் எதற்காக இந்த ராஜதந்திரம் என்று நடிகையை பற்றி திரையுலகில் பலரும் கிசுகிசுத்து வருகின்றனர்.

Views: - 655

6

5