நிலத்தை தோண்ட தோண்ட சிலைகள் : ஆம்பூர் அருகே ஆச்சரியம்!!

By: Udayachandran
13 October 2020, 10:24 am
Ambur Statue - Updatenews360
Quick Share

திருப்பத்தூர் : ஆம்பூர் அருகே விவசாய நிலத்தில் 2 தெய்வ வடிவிலான கற்சிலைகள் மற்றும் பழங்கால கற்பாறைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கீழ்முருங்கை பகுதியில் கோதண்டராமன் மகன் சரவணன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. நேற்று அவரது நிலத்தில் விவசாய பணிக்காக குழி தோண்டிய போது அதில் கல் ஒன்று சிக்கியது.

தொடர்ந்து தோண்டிய போது அதில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் சிலைகள் என இரு தெய்வ வடிவிலான கற்சிலைகள் கிடைத்தன. மேலும் தோண்டிய போது 20 கற்பாறைகள் மற்றும் ஒரு தூண் வடிவிலான பாறை உள்ளிட்டவைகள் கண்டெடுக்கப்ட்டன.

இது குறித்து தகவல் அறிந்து வந்த ஆம்பூர் வட்டாட்சியர் பத்மநாபன் மற்றும் வருவாய் துறையினர் அங்கு சென்று ஆய்வு நடத்தினர். உடன் அந்த கற்சிலைகள் மீதிருந்த மண்ணை அகற்றி பத்திரமாக ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லபட்டு அலுவலகத்தில் வைக்கப்பட்டு தொல்லியல் துறை நிபுணர்களை வரவழைத்து வருவாய்த்துறையினர் கற்சிலைகளை ஒப்படைக்க உள்ளனர்

Views: - 44

0

0