நீர்த்துப் போன பி.சி.ஆர் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது : திருத்தம் வேண்டி ஆட்சியரிடம் கொ.மு.க கோரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
23 August 2021, 11:45 am
Kongunadu Kazhagam Petition -Updatenews360
Quick Share

கோவை : சாதிய வன்கொடுமை சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாகவும், அதில் திருத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கொங்குநாடு முன்னேற்றக்கழகத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள வி.ஏ.ஒ அலுவலகத்தில் கடந்த 6ம் தேதி கோபால்சாமி என்ற விவசாயிக்கும், தண்டல்காரர் முத்துசாமி என்பவருக்கு இடையே தகராறு ஏற்பட்டு, முத்துசாமி கோபால் சாமியை தாக்கினார்.

இது தவறாக சித்தரிக்கப்பட்டு கோபால் சாமி மீது சாதிய வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் (பி.சி.ஆர்) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சூழலில், கொங்கு நாடு முன்னேற்றக்கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளர் லோகநாதன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தார்.

அதில் அவர் கூறியிருப்பது : பி.சி.ஆர் சட்டத்தை அரசு அதிகாரிகளும், சில குறிப்பிட்ட மக்களும் தவறாக பயன்படுத்தி வருகின்றனர். முழுமையாக விசாரிக்காமல் பி.சி.ஆர் வழக்கு பதிவு செய்யப்படுகிறது இந்த வழக்கின் கீழ் கைதானால் பிணையில் கூட வெளியே வரமுடியாது. 50 வருடங்களுக்கு தான் இந்த சட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்று அம்பேத்கர் கூறியுள்ளார்.

நீர்த்துப்போன இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. எனவே இந்த சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர வேண்டும். தீர விசாரணை நடத்திய பின்னரே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 145

1

0