திண்டுக்கல் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம்: தீர்ப்பு மறுபரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் சிவி சண்முகம் உறுதி!!

Author: Udayachandran
9 October 2020, 1:34 pm
CV Shanmugam- Updatenews360
Quick Share

விழுப்புரம் : திண்டுக்கல்லில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொலை செய்த வழக்கு மேல்முறையீடு செய்யப்படும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளியின் 12 வயது மகள் கடந்தாண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கிருபானந்தன் என்பவரை போலீசார் கைது செய்திருந்த இந்நிலையில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் அந்த நபரை விடுதலை செய்துள்ளது.

குற்றவாளி விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தமிழகம் முழுவதும் முடி திருத்தும் தொழிலாளர்கள் சலூன் கடையை அடைத்து எதிர்ப்பு தெரிவித்து வருகிற்னர். குற்றவாளியை கைது செய்ய வேண்டும் எனவும் வழக்கை சிபிஐ விசாரிக்க கோரியும், போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த கீழ்மாம்பட்டு அதிமுக பாசறை உறுப்பினர் சேர்க்கை ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்த சட்டத் துறை அமைச்சர் சி.வி சண்முகம் திண்டுக்கல் பாலியல் வன்கொடுமைக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை மறுபரிசிலினை செய்யும் என தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு உரிய ஆவணங்களை சேகரித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை பெற்று தரப்படும் என்றும், மேல்முறையீட்டுக்கு செல்ல வழிகாட்டுதல் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

Views: - 95

0

0