உளுந்து இல்லாமல் வாயிலேயே வடை சுடும் பிரதமர் மோடி: லியோனி விமர்சனம்..!

Author: Vignesh
17 December 2022, 11:17 am

சிவகாசியில் திமுக சார்பில் நடைபெற்ற பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பட்டிமன்ற நடுவர் லியோனி மேடையில் நகைச்சுவையுடன் அதிமுக மற்றும் பாஜகவை விமர்சனம் செய்தார்.

ஒபிஎஸ், ஈபிஎஸ் இவரும் செல்லா கசாக உள்ளதாக பேசிய அவர் தமிழகத்திற்கு வரும்போது பிரதமர் மோடி திருவள்ளுவர் மீது பற்றுள்ளது போல் திருக்குறள் செல்வதாகவும் அவர் உளுந்து இல்லாமல் வாயிலேயே வடை சுடுவதாக விமர்சனம் செய்தார்.

dindigul-leoni - updatenews360

மேலும் இளையராஜாவின் பாடலை பாடி அவரையே களாய்த்த லியோனி தன் தந்தையை சுற்றி வந்த விநாயகரை 200 போலீசார் முன்னிலையில் ஊர்வலமாக அழைத்து சென்று விநாயகர் சிலையை வைத்து வாக்கு பெறும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது எனவும், நகைச்சுவையுடன் பாடல்கள் பாடியபடி விமர்சனம் செய்து பேசினார்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?