திண்டுக்கல் நிர்மலா தேவி கொலை வழக்கில் அதிரடி திருப்பம் : ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் 8 பேர் சிக்கினர்!!!

Author: Udayachandran RadhaKrishnan
24 September 2021, 4:56 pm
Nirmala Devi Murder Arrest -Updatenews360
Quick Share

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் பழிக்க பழி வாங்க நிர்மலா தேவியை கொன்ற வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி இபி காலனி அருகே நிர்மலா தேவி கடந்த 22-ம் தேதி மர்ம நபர்களால் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவர்கள் திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலை சின்னாளப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே இருப்பதாக எஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து எஸ்பி தனிப்படையினர் அங்கு பதுங்கி இருந்த 3 நபர்களை பிடித்து விசாரணை செய்ததில் நிர்மலா தேவி கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்று தெரியவந்தது.

அதனடிப்படையில் திண்டுக்கல் செம்பட்டி மேட்டுப்பட்டியை சேர்ந்த அய்யனார் (வயது 21), தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தென் மண்டல செயலாளர் திண்டுக்கல் அருகே உள்ள கரட்டழகன்பட்டியைச் சேர்ந்த பெ.நடராஜன் (வயது 45), செம்பட்டி சீவல்சரகு பகுதியைச் சேர்ந்த பூபாலன் (வயது 21) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை செய்து திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். 3 பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் ஐந்து பேர் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 4 ல் சரணடைந்துள்ளனர்.

Views: - 437

0

0