கல்லூரியின் 3வது மாடியில் இருந்து குதித்த மாணவி… விபரீத முடிவு ஏன்..? 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு.. பதற்றம்!!

Author: Babu Lakshmanan
21 February 2023, 5:57 pm

திண்டுக்கல்லில் கல்லூரியின் மூன்றாவது மாடியில் இருந்து மாணவி கீழே குதித்த சம்பவத்தால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் ஒட்டன்சத்திரம் தாலுகா பழையபட்டியைச் சேர்ந்த கன்னியப்பன் – பழனியம்மாள். இவர்களின் மகள் கல்லூரி விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு நர்சிங் படித்து வந்த நிலையில், இன்று கல்லூரியின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

இதனால், உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, ஒட்டன்சத்திரம் குற்றவியல் விரைவு நீதிமன்ற நீதியரசர் செல்வ மகேஸ்வரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

கல்லூரி மாணவி அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை மற்றும் கல்லூரியில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, கல்லூரிக்கு விடுமுறை அளிக்க காவல்துறையினர், கோட்டாட்சியர் மற்றும் கல்லூரி நிர்வாகம் பேச்சுவார்த்தையில் நடத்தினர்.

மாடியில் இருந்து கல்லூரி மாணவி குதித்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!