திண்டுக்கல் சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கு : தமிழக அரசு மேல்முறையீடு

Author: Babu
13 October 2020, 4:46 pm
TN Secretariat - Updatenews360
Quick Share

திண்டுக்கல்லில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில் தமிழக அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளியின் 12 வயது மகள் கடந்தாண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கிருபானந்தன் என்பவரை போலீசார் கைது செய்திருந்த நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் அந்த நபரை விடுதலை செய்துள்ளது.

குற்றவாளி விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தமிழகம் முழுவதும் முடி திருத்தும் தொழிலாளர்கள் சலூன் கடையை அடைத்து எதிர்ப்பு தெரிவித்தனர். குற்றவாளிக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அரசின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 16ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

Views: - 72

0

0