இளம் ஓட்டல் உரிமையாளர் அரிவாளால் வெட்டிப் படுகொலை ; ஸ்கெட்ச் போட்ட 6 பேரை கைது செய்தது போலீஸ்..!!

Author: Babu Lakshmanan
7 September 2023, 12:43 pm

திண்டுக்கல் அருகே தொழில் போட்டி காரணமாக ஹோட்டல் உரிமையாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் தாடிக்கொம்பு அடுத்த பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்தவர் நடராஜ், இவரது மகன் ஆனந்த சுதன் (வயது 22). இவர் திண்டுக்கல் – திருச்சி புறவழி சாலை EB காலனி அருகே கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு புதிதாக ஹோட்டல் துவங்கினார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஹோட்டலுக்கு தேவையான பொருளை எடுப்பதற்காக தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

ரங்கநாதபுரம் மலை அருகே சென்ற போது காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நான்கு பேர் இருசக்கர வாகனத்தை வழிமறித்து, தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் ஆனந்த சுதனை வெட்டினர்.

இதில் படுகாயம் அடைந்த ஆனந்த சுதன், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தாடிக்கொம்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குற்றவாளிகளை பிடிக்க போலீசார் 3 தனிப்படைகளை அமைத்து தேடிவந்த நிலையில், திண்டுக்கல் புறவழிச்சாலையில் பதுங்கி இருந்த திண்டுக்கல்லை சேர்ந்த முரளிராஜா (வயது 35), ஆனஸ்ட்ராஜ் (வயது 32), இன்னாசி ஸ்டீபன் ராஜ் (வயது 31), ராபின் ஸ்டீபன் (வயது 28), பழனிச்சாமி (வயது 29), வெங்கடேசன் (வயது 32) உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட ஆறு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!