சுற்றுலா பயணிகளுக்கு குட்நியூஸ்: பாரிசில் இருந்து சென்னைக்கு நேரடி விமான சேவை தொடக்கம்…!!

Author: Aarthi Sivakumar
27 June 2021, 1:19 pm
Quick Share

சென்னை: பிரான்ஸ் தலைநகா் பாரிசில் இருந்து சென்னைக்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது சுற்றுலாப் பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘ஏர் பிரான்ஸ்’ என்ற விமான நிறுவனத்தின் ஏஎப்108 விமானம் நேற்று பிரான்ஸ் நாட்டின் தலைநகா் பாரிசில் இருந்து 11.49 மணிக்குப் புறப்பட்டு 9 மணி நேரம் 50 நிமிடங்கள் பயணித்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு நள்ளிரவு 11.55 மணிக்கு வந்தடைந்தது. இதில் 111 பேர் இதில் பயணித்தனர்.

விமானம் தரையிறங்கிய வீடியோவையும் சென்னை விமான நிலைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, பாரிசில் இருந்து டெல்லி, பெங்களூரு, மும்பைக்கு ஏர்பிரான்ஸ் விமான சேவை இருந்து வரும் நிலையில் சென்னைக்கான விமான சேவை நான்கவதாகும். வாரத்திற்கு ஒருமுறை இருமார்க்கமாக இயக்கப்படும் விமானம், ஒவ்வொரு சனிக்கிழமையும் பாரிஸ்- சென்னை, ஒவ்வொரு திங்கள்கிழமையும் சென்னை- பாரிஸ் இடையே விமான சேவை இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

அதன்படி வருகிற ஜூன் 28ம் தேதி சென்னையில் இருந்து நள்ளிரவு 1.20 க்கு பாரிஸ்-க்கு புறப்படும் விமானம் அங்கு 8.15 மணிக்கு சென்றடைகிறது. பயணிகளின் கோரிக்கையை ஏற்று பிரான்ஸ் நாட்டின் தலைநகா் பாரிசில் இருந்து சென்னைக்கு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது சுற்றுலாப் பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 196

0

0