புதுச்சேரியில் அதிருப்தி அமைச்சர் பாஜகவில் இணைகிறார்? ஆதரவாளருடன் திடீர் ஆலோசனை!!

24 January 2021, 10:54 am
Namasivayam- Updatenews360
Quick Share

புதுச்சேரி : ஆளும் கட்சியில் உள்ள அதிருப்தி அமைச்சர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் தனது ஆதரவாளர்களுடன் திடீர் ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் அரசின் அமைச்சரவையில் பொதுப்பணித் துறை, உள்ளாட்சி உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளின் அமைச்சராக உள்ளவர் நமச்சிவாயம். கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நமச்சிவாயத்தை முன்னிலைபடுத்தி காங், திமுக கூட்டணி தேர்தலை சந்தித்து ஆட்சி அமைத்தது.

பின்னர் முதலமைச்சராக கட்சி தலைமை நாராயணசாமியை தேர்வு செயது நமச்சிவாயத்தை அமைச்சராக்கியது. இதனால் அவர் அதிருப்தி அடைந்தார். இதனிடையே கடந்த ஆண்டு நமச்சிவாயம் வகித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது.

இதனால் மேலும் அதிருப்தி அடைந்த அவர் கட்சி நிகழ்ச்சிகளை தொடர்ந்து புறக்கணித்து வந்தார். அவ்வப்போது கட்சி தலைமை சமாதானப்படுத்திய நிலையில் அமைச்சர் நமச்சிவாயம் பாஜகவில் இணைய போவதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் காங்கிரசில் அதிருப்தியில் உள்ள அமைச்சர் நமச்சிவாயம் தனது ஆதரவாளர்களுடன் வில்லியனூர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் திடீர் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மாற்று கட்சியில் இணைவது குறித்து பேசியதாக கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர்.

கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நமச்சிவாயம், வழக்கமாக நடத்துவது போன்று தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியதாகவும், பாஜகவில் தற்போது இணையும் எண்ணம் இல்லை என தெரிவித்தார்.

வரும் 30ஆம் தேதி புதுச்சேரிக்கு வருகை தரவுள்ள பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தியில் அமைச்சர் நமச்சிவாயம் இணைய உள்ளதாகவும் அவரது ஆதரவாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Views: - 0

0

0