முதலில் யார் புறப்படுவது என்பதில் தகராறு..மினி பேருந்து மேலாளருக்கு அடி, உதை : அரசு போக்குவரத்து ஊழியர்கள் தாக்கிய வீடியோ வைரல்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 April 2022, 9:46 pm
Mini Bus Attacked by Govt - Updatenews360
Quick Share

தஞ்சாவூர் : மினிபேருந்தின் மேலாளரை , அரசு பேருந்து ஊழியர்கள் தாக்கும் வீடியோ சமூக வளைதலங்களில் வேகமாக பரவி வருகிறது.

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு அரசு நகர பேருந்துகள், தனியார் பேருந்துகள் மற்றும் மினிபேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தும், JBS என்கிற மினி பேருந்தும் புறப்படுவதற்கான நேரத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மினிபேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மேலாளரை தொலைப்பேசியில் அழைத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த மேலாளர் சிவா என்பவர் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் தகாத வார்த்தைகளை கூறி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அங்கு வந்து நேர கண்காணிப்பாளர் அனைவரும் சேர்த்து மினி பேருந்து மேலாளரை தாக்கியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. தற்போது மினிபேருந்து ஓட்நரை அரசு ஊழியர்கள் தாக்கும் வீடியோ சமூக வளைதலங்களில் வேகமாக பரவி வருகிறது.

Views: - 740

0

0