போலி நிறுவனங்களின் பெயரில் நிதி கையாடல் செய்ததாக புகார் : சிக்கிய ஊராட்சி மன்ற தலைவி.. அதிரடி ஆக்ஷனில் இறங்கிய ஆட்சியர்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 April 2022, 8:14 pm

கோவை : நிதி இழப்பு ஏற்படுத்தியதாக புகாரை தொடர்ந்து குன்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவருக்கு ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கோவை மாவட்டம் அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய தலைவர் கீதா. இவர் ஊராட்சியில் அரசு விதிகளை மீறி வணிக பயன்பாட்டிற்கு அனுமதி அளித்ததாகவும் தொழிற்சாலைகளுக்கு குறைந்த கட்டணம் வாடகை வசூலிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தன.

அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் ஊராட்சி மன்ற கூட்டம் நடத்தப்படவில்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தொடர் குற்றச்சாட்டுகளை அடுத்து குன்னத்தூர் ஊராட்சித் தலைவருக்கு ஆட்சியர் சமீரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில் குற்றச்சாட்டுகளுக்கு உரிய விளக்கத்தை 15 நாட்களில் ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தவறினால் சட்ட விதிகள் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.

  • vismaya mohanlal introduce as a heroine in thudakkam movie சினிமாவிற்குள் நுழையும் மோகலாலின் இரண்டாவது வாரிசு? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!