மார்கழியாக மாறிய மாசி மாசம் : மூடுபனிக்குள் சிக்கிய மாவட்டம்!!!

27 February 2021, 10:50 am
villupuram Fog -Updatenews360
Quick Share

விழுப்புரம் : மாசி மாத்தில் மார்கழியாக மறிய கடும் பனிப்பொழிவில் விழுப்புரம் மாவட்டம் சிக்கியுள்ளது.

மார்கழி மாதம் முடிந்து மாசி மாதமே தொடங்கிய நிலையில் விழுப்புரத்தில், காலை 5 மணி முதல் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் சென்னை தேசிய நெடுஞ்சாலை பனி பொழிவு ஏற்பட்டு சாலை முழுவதும் பனி படர்ந்த நிலையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு ஊர்ந்து சென்று கொண்டிருக்கும் நிலை தான் 7.30 மணி வரை மூடு பனிபொழிவு காணப்பட்டது.

இதன் காரணமாக காலை நடை பயிற்சி மேற்கொள்பவர்கள் சிரமப்பட்டு வெளியே வர முடியாத நிலையில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் கடும் பனி பொழிவு காரணமாக காலையில் வியாபாரிகள் பொருட்களை வாங்கி வருவதில் சிக்கல் ஏற்ப்பட்டது.

கிராமப்புறங்களில் அதிக பனி மூட்டம் காரணமாக முழுவதும் வயல்வெளிகள் பனிப்போர்வை போர்த்திய படி காணப்பட்டது. அருகில் உள்ள வீடுகள் தெரியாததால் மக்கள் வீடுகளை விட்டு யாரும் வெளியே வரவில்லை.

Views: - 11

0

0