அரசு நிலத்தில் வீடு கட்டிய தந்தை…போலி பட்டா தயாரித்த பெண் வி.ஏ.ஓ…பணியிடை நீக்கம் செய்த ஆட்சியர்…!!

By: Aarthi
9 October 2020, 4:35 pm
land scam - updatnews360
Quick Share

அரியலூர்: கடுகூர் கிராமத்தில் போலி பட்டா தயாரித்த பெண் வி.ஏ.ஓ-வை மாவட்ட ஆட்சியர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டம் கடுகூர் கிராமத்தை சேர்ந்த தனவேல் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் ராணி, அரியலூர் மாவட்டம் காவனூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.

Crime_updateNews360

இந்நிலையில், தனவேல் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளார். மேலும் ஆக்கிரமிப்பு செய்த இடத்திற்கு பட்டா மாற்றி தருமாறு மகள் ராணியிடம் கேட்டுள்ளார்.

இதனால் ராணி கடுகூர் கிராம நிர்வாக அலுவலருக்கான முத்திரையை போலியாக தயாரித்து, கடுகூர் வி.ஏ.ஓ சரஸ்வதியின் கையெழுத்தையும் போலியாக போட்டு, வருவாய் துறையினர் மூலம் பட்டா மாற்றம் செய்துள்ளார்.

இதுகுறித்து, கிராம மக்கள் ஆட்சியர் ரத்னாவிடம் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் உரிய விசாரணை மேற்கொள்ள வருவாய் துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விசாரணையில் ராணி போலி பட்டா தயார் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, மோசடியில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர் ராணியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் ரத்னா உத்தரவிட்டார்.

மேலும், இந்த மோசடிக்கு கடுகூர் கிராம நிர்வாக அலுவலர் சரஸ்வதி உதவினாரா என்பது குறித்து வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 59

0

0