10 ஆயிரம் கொரோனா பாதிப்புகளை நெருங்கும் மேலும் 4 மாவட்டங்கள் : மாவட்ட வாரியான விபரம்..!

24 August 2020, 6:28 pm
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஏறி, இறங்கி வரும் நிலையில், மாவட்ட வாரியான பாதிப்பு விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. வந்தது. இன்று 5,976 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,85,352 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் சென்னையில் 1,278 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, கோவையில் 387 பேருக்கும், கடலூரில் 370 பேருக்கும், திருவள்ளூரில் 320 பேருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்கள் தலா 10 ஆயிரம் பாதிப்புகளை நெருங்கி வருகிறது.

மாவட்ட வாரியான பாதிப்பு விபரத்தை தற்போது காணலாம்..!

Views: - 0

0

0